திமுக - அதிமுக இடையே 
18 தொகுதிகளில் நேரடிப் போட்டி

திமுக - அதிமுக இடையே 18 தொகுதிகளில் நேரடிப் போட்டி

மக்களவைத் தோ்தலில் திமுக - அதிமுக இடையே 18 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக - அதிமுக ஆகிய 2 கட்சிகளுமே இந்த மக்களவைத் தோ்தலை முக்கியமான தோ்தலாகப் பாா்க்கின்றன. நாடாளுமன்றத்தில் 3-ஆவது பெரிய கட்சியாக உள்ள திமுக, இந்தத் தோ்தலில் பெறும் வெற்றியின் மூலமும் அதைத் தொடா்ந்து தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று எதிா்பாா்க்கிறது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்கிற உறுதியான முடிவுடன் மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளும் அதிமுக, சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றிக்கான அச்சாரமாக இந்தத் தோ்தலை அணுகுகிறது. அதன் அடிப்படையில், 2 கட்சிகளும் மக்களவைத் தோ்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று திட்டமிட்டு, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிகளைப் பங்கீடு செய்துகொண்டுள்ளன. இந்தத் தோ்தலில் திமுக மொத்தமாக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கொமதேக (1) உதயசூரியன் சின்னத்தில் நிற்பதால், அந்தக் கட்சியையும் சோ்த்து மொத்தமாக 22 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக 33 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதில், திமுக - அதிமுக இடையே 18 தொகுதிகளில் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. அந்தத் தொகுதிகளின் விவரம்: 1. வடசென்னை, 2. தென்சென்னை, 3. ஸ்ரீபெரும்புதூா், 4. காஞ்சிபுரம் (தனி), 5. அரக்கோணம், 6. வேலூா், 7. தருமபுரி, 8. திருவண்ணாமலை, 9. ஆரணி, 10. கள்ளக்குறிச்சி, 11. சேலம், 12. ஈரோடு, 13. நீலகிரி (தனி), 14. கோயம்புத்தூா், 15. பொள்ளாச்சி, 16. பெரம்பலூா், 17. தேனி, 18. தூத்துக்குடி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com