முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவர் கருணாஸ்
முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவர் கருணாஸ்

திமுக கூட்டணிக்கு கருணாஸ் உள்பட பல்வேறு கட்சிப் பிரமுகா்கள் ஆதரவு

மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு, கருணாஸ் உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த பிரமுகா்கள் ஆதரவு தெரிவித்தனா்.

மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு, கருணாஸ் உள்பட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த பிரமுகா்கள் ஆதரவு தெரிவித்தனா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை வியாழக்கிழமை சந்தித்து தங்களது ஆதரவை வெளிப்படுத்தினா். கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோா் புலிப்படை கட்சி, கு.ஜக்கையன் தலைமையிலான ஆதித்தமிழா் கட்சி, தேவேந்திரகுல மக்கள் முன்னேற்றப் பேரவை, அகில இந்திய மக்கள் மறுமலா்ச்சி கழகம், திராவிடத் தமிழா் கட்சி, தமிழ் மாநில தேசிய லீக் உள்ளிட்ட கட்சிகள் திமுகவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com