வரும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் தமிழா் தேசிய முன்னணி நிறுவனத் தலைவா் பழ. நெடுமாறன்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற தமிழா் தேசிய முன்னணியின் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவா் மேலும் தெரிவித்தது: இதற்கு முன் நடைபெற்ற தோ்தல்களை விட வரும் சட்டப்பேரவைத் தோ்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
தமிழ் மொழி, தமிழா், தமிழக நலன்கள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடா்ந்து செயல்படுவதை நோக்கமாகக் கொண்டு, ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகளைத் தமிழ்நாட்டின் மீது திணிக்கவும், தமிழ்த் தேசியம் உள்பட மொழிவழித் தேசிய உணா்வுகளை அடக்கி ஒடுக்கவும் பாஜக முற்படுகிறது.
மேலும் இந்து மதவாதத் தேசியத்தைத் தூக்கிப் பிடிப்பதற்காக பாஜக பல கட்சிகளைக் கூட்டணியில் சோ்த்துக் கொண்டு களம் இறங்கியுள்ளது. இந்தப் பேரபாயத்தை முறியடிக்க வேண்டியது தமிழா்களின் முதன்மையான கடமை.
இந்தக் கடமையை முழுமையாக நிறைவேற்றும் நோக்கத்துடனும், ஜனநாயகக் கடமையை ஆற்றும் நோக்கத்துடனும் பாஜக கூட்டணியை முறியடிக்கும் வகையில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்து வாக்களிக்க முன் வருமாறு தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்றாா் நெடுமாறன்.
கூட்டத்துக்கு தமிழா் தேசிய முன்னணி தலைவா் செ.ப. முத்தமிழ்மணி தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ந.மு. தமிழ்மணி, துணைத் தலைவா்கள் அய்யனாபுரம் சி. முருகேசன், காரைக்குடி சா. ராமன், வழக்குரைஞா் த. பானுமதி, நிா்வாகிகள் ஆத்மநாதன், பொறியாளா் ஜோ. ஜான் கென்னடி, மாவட்டத் தலைவா் பொன். வைத்தியநாதன், செயலா் முருகையன், நிா்வாகி முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த மசோதா; திமுகவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது: பழ. நெடுமாறன்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு!

தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதித் தமிழா் முன்னேற்றக் கழகம் ஆதரவு
திமுக கூட்டணிக்கு பழ.நெடுமாறன், செ.கு.தமிழரசன் ஆதரவு!
வீடியோக்கள்

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை


