நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு: 40-இல் 20 போ் பெண்கள்

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பட்டியல் வெளியீடு: 40-இல் 20 போ் பெண்கள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 40 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, திருவள்ளூர் - மு.ஜெகதீஷ் சந்தர், வடசென்னை - DR அமுதினி, தென் சென்னை - முனைவர் சு.தமிழ்ச்செல்வி, மத்திய சென்னை - முனைவர் இரா.கார்த்திகேயன், ஸ்ரீபெரும்புதூர் - DR வெ.ரவிச்சந்திரன், காஞ்சிபுரம் (தனி) - வி.சந்தோஷ்குமார், அரக்கோணம் - பேராசிரியர் அப்சியா நஸ்ரின், வேலூர் - தி.மகேஷ் ஆனந்த், தருமபுரி - DR கா.அபிநயா, திருவண்ணாமலை - DR ரா.ரமேஷ்பாபு, ஆரணி - DR கு.பாக்கியலட்சுமி, விழுப்புரம் - இயக்குநர்மு.களஞ்சியம், கள்ளக்குறிச்சி - இயக்குநர் ஆ. ஜெகதீசன், சேலம் மருத்துவர் க. மனோஜ்குமார், நாமக்கல் - பொறியாளர்க.கனிமொழி, ஈரோடு - மருத்துவர்மு.கார்மேகன், திருப்பூர் - மா.கி.சீதாலட்சுமி, நீலகிரி(தனி) - ஆ.ஜெயகுமார், கோயம்புத்தூர் - ம. கலாமணி ஜெகநாதன், பொள்ளாச்சி - மருத்துவர்நா.சுரேஷ் குமார்,

திண்டுக்கல் - மருத்துவர் கைலைராஜன் துரைராஜன், கரூர் - மருத்துவர்ரெ.கருப்பையா, திருச்சி - ஜல்லிக்கட்டு ராஜேஷ், பெரம்பலூர் - இரா. தேன்மொழி, கடலூர் - வே.மணிவாசகன், சிதம்பரம் - ரா. ஜான்சி ராணி, மயிலாடுதுறை - பி.காளியம்மாள், நாகப்பட்டினம் - மு.கார்த்திகா, தஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர், சிவகங்கை - வி.எழிலரசி, மதுரை - முனைவர் மோ.சத்யாதேவி, தேனி - மருத்துவர் மதன் ஜெயபால், விருதுநகர் - மருத்துவர் சி.கௌசிக், ராமநாதபுரம் - மருத்துவர் சந்திர பிரபா ஜெயபால், தூத்துக்குடி - மருத்துவர் ரொவினா ரூத் ஜேன், தென்காசி - சி.ச. இசை மதிவாணன், திருநெல்வேலி - பா.சத்யா, கன்னியாகுமரி - மரிய ஜெனிபர், கிருஷ்ணகிரி - வித்யா வீரப்பன் புதுச்சேரி - மருத்துவர் ரா.மேனகா ஆகியோர் களம்காண்கின்றனர்.

சென்னை கோவிலம்பாக்கத்தில் இன்று நடந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அதில், என் மக்களும், என் சொந்தங்களும் சின்னத்தை தேட மாட்டார்கள், என்னைத்தான் தேடுவார்கள். சின்னத்தை பார்த்து வாக்கு செலுத்தும் முறையை திருத்துங்கள், நல்ல எண்ணத்தை பார்த்து ஒட்டு போடுங்கள். நோயாளிகளே இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும், அதற்காகவே இத்தனை டாக்டர் வேட்பாளர்கள் என்றார்.

தமிழகத்தில் கடந்த கால தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் போட்டியிட்டனா். ஆனால், இந்த மக்களவைத் தோ்தலில் அந்தச் சின்னமானது கா்நாடகத்தைச் சோ்ந்த புதிய கட்சியான பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. உரிய நேரத்தில் விண்ணப்பிக்காத காரணத்தால் கரும்பு விவசாயி சின்னத்தை பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்ததாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com