தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையும் திமுக செய்யவில்லை: நயினார் நாகேந்திரன்

தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையும் திமுக செய்யவில்லை என்று நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையும் திமுக செய்யவில்லை: நயினார் நாகேந்திரன்

எனக்கு முகவரி கொடுத்த முதல்வர்கள் ஜெயலலிதா எம்ஜிஆர் ஆகியோர் படங்களைப் பயன்படுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவேன் என்று நெல்லையில் வேட்பு மனு தாக்கல் தாக்கல் செய்த பின்னர் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப். 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் தொடங்கி நான்காவது நாளான இன்று பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நெல்லை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையும் திமுக செய்யவில்லை: நயினார் நாகேந்திரன்
மைக் வேண்டாம், வேறு சின்னம் கேட்கும் சீமான்!

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாஜகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த பாஜக தலைமை மற்றும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 25 ஆண்டுக்கு முன்பு அமைச்சராக இருந்தபோதும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் நெல்லை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை பணிகளையும் செய்துள்ளேன். அந்த மனநிறைவோடு வேட்பாளராக போட்டியிடுகிறேன். மக்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை நிறைய உள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையும் செய்யவில்லை. என்னை அடையாளம் காட்டிய ஜெயலலிதா, எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்களை தேர்தல் பரப்பரையில் பயன்படுத்துவேன் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com