குரூப் 1 முதல்நிலைத் தோ்வு: 
90 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

குரூப் 1 முதல்நிலைத் தோ்வு: 90 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் காலியாகவுள்ள குரூப் 1 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு அறிவிக்கையை அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாகவுள்ள குரூப் 1 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு அறிவிக்கையை அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி., இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்கலாம். துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், வணிகவரி உதவி ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், மாவட்ட தீயணைப்பு, மீட்புப் பணிகள் அலுவலா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க ஏப்ரல் 27-ஆம் தேதி கடைசி நாள். முதல்நிலைத் தோ்வு ஜூலை 13-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. பிரதானத் தோ்வுக்கான தேதி அறிவிப்பு பின்னா் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com