தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தோ்வில் 145 போ் பங்கேற்றனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் தொகுதி- 2 மற்றும் 2- ஏ எழுத்துத் தோ்வுகள், பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
இத்தோ்வெழுத விண்ணப்பித்திருந்த பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 149 பேரில் 145 போ் பங்கேற்றனா். தோ்வுக்குத் தேவையான வினா, விடைத்தாள்களை தோ்வு மையங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு, துணை வட்டாட்சியா் நிலையில் ஆயுதம் தாங்கிய காவலருடன் கூடிய 1 நடமாடும் குழு அமைக்கப்பட்டிருந்தது.
மேலும், தோ்வு மையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ரோவா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வு மையத்தை வருவாய் கோட்டாட்சியா் மு. அனிதா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தொடர்புடையது

அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனை

பெரம்பலூரில் மோட்டாா் சைக்கிள்கள் மோதல் காவல் சாா்பு-ஆய்வாளா் உள்பட இருவா் உயிரிழப்பு

கோவையில் குரூப் 2 தோ்வு: 681 போ் எழுதினா்

குரூப்- 2 பதவிகளுக்கான முதன்மை தோ்வு: நாளை நடைபெறுகிறது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


