துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

துறையூர் அருகே கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவிப்பு.
murder
murder

துறையூர்: துறையூர் அருகே கடந்த ஆண்டு ஜூலை மாதம் மர்ம நபர்களால் கணவன், மனைவி கொல்லப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகள் குறித்து சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகள் அல்லது வழக்கில் துப்புத் துலங்க ஏதேனும் சிறு தகவல் தெரிந்தாலும் உடனடியாக 9363668900 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்கலாம் என்றும், தகவல் அளிப்பரிவன் ரகசியம் காக்கப்படும், ரூ.25 ஆயிரம் சன்மானமாக வழங்கப்படும் என்றும் திருச்சி காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சோபனபுரத்தில் வசிப்பவர் தங்கவேலு மகன் ராஜ்குமார்(29). இவரது மனைவி சாரதா (19). இவர்களுக்கு இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய சொந்த ஊர் துறையூர் அருகேயுள்ள பி மேட்டூர் கிராமம்.

திருமணத்திற்கு பின்னர் ராஜ்குமார் சோபனபுரம் விஜயசேகரின் வயலைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதால் கணவனும் மனைவியும் சோபனபுரத்தில் தங்கினராம்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு வெளியே கட்டிலில் உறங்கிய போது கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மறுநாள் காலை இருவரும் தலையில் காயங்களுடன் சடலங்களாக கட்டிலில் கிடந்தனர்.

இது தொடர்பாக உப்பிலியபுரம் காவல் துறையினர் கொலை வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். திருச்சியிலிருந்து தடயவியல் மற்றும் விரல்ரேகை நிபுணர்கள் சென்று தடயங்களை சேகரித்தனர். கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் யாரென காவல் துறையினர் விசாரித்து வந்தனர். ஆனால், இந்த கொலையில் இதுவரை துப்புத் துலங்காத நிலையில், கொலையாளிகள் குறித்து துப்புக் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com