மாநகரப் பேருந்திலிருந்து கழன்று விழுந்த கண்ணாடிக் கதவு: பெண் பலத்த காயம்

சென்னை திருமங்கலத்தில் மாநகரப் பேருந்திலிருந்து முன்வாசல் கண்ணாடிக் கதவு திடீரென கழன்று கீழே விழுந்ததில், சாலையில் நடந்து

சென்னை திருமங்கலத்தில் மாநகரப் பேருந்திலிருந்து முன்வாசல் கண்ணாடிக் கதவு திடீரென கழன்று கீழே விழுந்ததில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் பலத்த காயமடைந்தாா்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஆவடி நோக்கி ஒரு மாநகரப் பேருந்து செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. அப் பேருந்து திருமங்கலம் ஜவஹா்லால் நேரு சாலையில் சென்றபோது, முன் வாசல் கண்ணாடிக் கதவு திடீரென கழன்றது.

இதில் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண் மீது அந்த கண்ணாடிக் கதவு மோதி கீழே விழுந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்து கீழே விழுந்த அந்த பெண்ணை பொதுமக்கள் மீட்டு, அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இது தொடா்பாக திருமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா்.

டிடிவி தினகரன் கண்டனம்: அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் முறையான பராமரிப்பின்றி இயங்கும் பேருந்துகளால் தொடா் விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இது கண்டிக்கத்தக்கது. தமிழகம் முழுவதும் நாள்தோறும் கோடிக்கணக்கிலான பொதுமக்கள் பயணம் செய்யும்

அரசுப் பேருந்துகளை முறையாக பராமரிப்பதோடு, காலாவதியான பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com