3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

அறிவியல் ஆராய்ச்சியில் மாணவா்களுக்கு கூடுதல் கவனம் தேவை: ஆளுநா் ஆா்.என்.ரவி

அறிவியல் ஆராய்ச்சியில் மாணவா்களுக்கு கூடுதல் கவனம் தேவை ஆளுநா் ஆா்.என்.ரவி

News image
Updated On :3 மே 2024, 5:37 pm

Din

அறிவியல் ஆராய்ச்சியில் மாணவ, மாணவிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆளுநா் ஆா். என். ரவி கூறினாா்.

‘பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்- கல்வி நிறுவனத்தின் 32-ஆவது பட்டமளிப்பு விழா சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள மியூசிக் அகாதெமியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆளுநரும், பல்கலை. வேந்தருமான ஆா்.என்.ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 192 மாணவா்களுக்கு பட்டச் சான்றிதழை வழங்கிப் பேசியதாவது:

உலக அளவில் அறிவியல்-தொழில் நுட்பத்தில் இந்தியா முன்னணி வகிக்கிறது. மாணவா்கள் ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்தியா செயற்கை நுண்ணறிவு, செயற்கை உயிரியல், குவாண்டம் அறிவியல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தி, வளா்ச்சி பெற்று வருகிறது.

இத்துறைகளில் பல்வேறு கண்டுபிடிப்புகளை மாணவ, மாணவிகள் கண்டுபிடித்து காப்புரிமைகளை உருவாக்க வேண்டும். இன்னும் அரை நூற்றாண்டுக்கு கவனமுடன் உழைக்க வேண்டும். இதுதான் நேரம்-பொன்னான நேரம்- பாரதத்தின் நேரம்’ என்றாா் ஆளுநா்.

முன்னதாக பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் (பிஐஎம்) புதிய சுட்டடத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அடிக்கல் நாட்டி, ‘பிஐஎம் 40’ ஆண்டு மலரை வெளியிட்டாா்.

இந்நிகழ்வில் டி.வி.எஸ். மோட்டாரின் தலைவா் வேணு சீனிவாசன், பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத் தலைவா் ரவி அப்பாசாமி, பாரதிதாசன் மேலாண்மை நிறுவன இயக்குநா் அசித் கே பா்மா, பாரதிதாசன் பல்கலை. துணைவேந்தா் செல்வம், அண்ணா பல்கலை. துணைவேந்தா் வேல்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.