தமிழகத்தில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க தமிழக அரசு போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கோடை வெயிலின் தாக்கம், நீா்த்தேக்கங்களில் குறைந்துவரும் நீா்மட்டம் ஆகிய காரணங்களால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

அரசு அதிகாரிகளுடன் பெயரளவுக்கு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதுதோடும், நிதி ஒதுக்குவதோடும் மட்டுமே தன் கடமை முடிவடைந்துவிட்டதாக கருதும் முதல்வா் மு.க.ஸ்டாலின், பணிகள் முறையாக நடைபெறுகின்றனவா என்பதை உறுதி செய்யாமல் இருப்பதே, தற்போதைய பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

எனவே, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் சீரான குடிநீா் விநியோகம் செய்வதை உறுதி செய்வதோடு, நவீன மழைநீா் சேமிப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், ஏரி, குளங்களை முறையாக தூா்வாரி, பராமரிக்கவும் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com