நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

நீட் தேர்வு ரத்து ரகசியத்தை வெளியிட அமைச்சர் உதயநிதி முன்வருவாரா-? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நீட் தேர்வு ஏழை எளிய சாமானிய மக்களுக்கு இன்னும் எட்டாகனியாக உள்ளது. ஏனென்றால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் வெளியே செல்கிறார்கள் நீட் தேர்வு எழுதக்கூடிய முன் வருகிற மாணவர்கள் இந்த நான்காண்டு காலத்திலே பார்க்கிற போது ஒரு லட்சம் என்று சொன்னால் பத்தில் ஒரு சகவீதம் தான் உள்ளது.

நீட் தேர்வுக்கு தீர்வு காணும் வகையில இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் 7.5 இட ஒட்டிக்கீட்டு எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். ஆனால் அந்தத் திட்டத்தை அரசு மூடி மறைக்கிறது. சாதனையை அரசு திரையிட்டு மூடப்பார்க்கிறது. ஆனால் நீட்தேர்வுக்கு உந்து சக்தியாக 7.5 சகவீத இடஒதுக்கீடு இருந்தது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டக்கனியாக இருந்த நீட் தேர்வை இதயக்கனியாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.

இந்த அரசு வாய்ச்சொல் வீரராக இருக்கிறார்கள் தவிர மக்களுக்காக ஏதுமில்லை. நாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்றால் நீட் தேர்வை ஒரே கையெழுத்திலே ரத்து செய்வோம் என்று சொன்ன உதயநிதி ஸ்டாலினும் அவரது தந்தையாரும் திமுக தலைவர் ஸ்டாலினும் நீட் தேர்வுக்கு விடை காணவும், ரத்து செய்வதற்கு எந்த முயற்சி எடுக்கவில்லை.

நீட் தேர்வு ரத்து என்ற ரகசியம் சொன்ன உதயநிதி ஸ்டாலின் அவர்களே எப்போது வெளியிடப் போகிறீர்கள் ? ஒரு கையெழுத்தில் ரத்து செய்வோம் என்று சொன்ன அந்த ரகசியத்தை எப்போது உடைக்க போகிறீர்கள்? எப்போது மக்களிடத்தில் வெளியிடப் போகிறீர்கள். ஆகவே மக்களை ஏமாற்றுகிற இத்தகைய செயலை நீங்கள் தொடர்பீர்களானால் எத்தனை உயிர்களை நாம் இன்னும் பலி கொடுக்க வேண்டும்.

இந்த நீட் தேர்வின் ரத்து ரகசியத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் முன்வருவாரா? அதற்கு முதல்வர் துணை புரிவாரா?. உண்மையிலே மக்கள் மீது அக்கறை இருக்கின்ற  எடப்பாடி பழனிசாமி 7.5% இட ஒதுக்கீடு கொடுத்து ஏழை, எளிய சாமானிய அரசு பள்ளியில் படிக்கிற மாணவர்களின் கனவை நினைவாக்கினார். அதை இன்றைக்கு அரசு முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறினார்.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நாடு முழுவதும் 557 நகரங்களில் நடைபெற உள்ளது. சுமார் 24 லட்சம் பேர் இத்தேர்வை எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com