
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளன.
சென்னை டிபிஐ வளாகத்தில் அதாவது அன்பழகன் வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலமாக மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்ள ஏதுவாக அவா்கள் பள்ளிகளில் அளித்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் வழக்கம்போல அனுப்பி வைக்கப்படவுள்ளது.
பள்ளி மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.