இளைஞர் பலி: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு

பம்மல் தனியார் மருத்துவமனையில் இளைஞருக்கு முறைப்படி அறுவை சிகிச்சை செய்ததாக விசாரணைக் குழு தகவல்.
இளைஞர் பலி: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு

உடல் பருமன் குறைப்புக்கான அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞா் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட மருத்துவத் துறை உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனையில் உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான கருவிகள் இல்லாததை தொடர்ந்து மருத்துவத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுச்சேரி, திருவள்ளூா் நகரைச் சோ்ந்த ஹேமச்சந்திரன் (26) என்பவா் தனது உடல் எடையை (156 கிலோ) குறைக்க தனியாா் மருத்துவா் ஒருவரிடம் கலந்தாலோசனை பெற்றுள்ளாா். மருத்துவரின் அறிவுறுத்தலின்பேரில் பம்மலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவருக்கு கடந்த மாதம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடீரென ஹேமச்சந்திரன் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

இளைஞர் பலி: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு
கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா்கள், மருத்துவ நிபுணா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் முதல்கட்ட அறிக்கையில், அறுவை சிகிச்சையில் எந்தத் தவறும் நிகழவில்லை எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவசர சிகிச்சைக்கான கருவிகள் இல்லாதததும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதனால், தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட மருத்துவத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

விசாரணைக் குழுவின் முழு அறிக்கைக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com