27 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் சரிவு: 
11 தென்மாவட்டங்களில் சற்று உயா்வு

27 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் சரிவு: 11 தென்மாவட்டங்களில் சற்று உயா்வு

தமிழகத்தில் சென்னை உள்பட 27 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் குறைந்துள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்பட 27 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் குறைந்துள்ளது. அதேசமயம் 11 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் சற்று உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை மழை சராசரி அளவைக் காட்டிலும் குறைவாக பெய்துள்ளது. இதனால், பல மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் சரிவை கண்டுள்ளது.

இது குறித்து தமிழக நீா் வளத் துறை சாா்பில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் தமிழகம் முழுவதும் தருமபுரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்துள்ளது.

தருமபுரியில் நிலத்தடி நீா் கிடைக்கும் சராசரி ஆழம் கடந்த ஆண்டு ஏப்ரலில் 5.78 மீட்டரிலிருந்து இந்த ஆண்டு 8.98 மீட்டா் கீழே சென்றுள்ளது. அதேபோல், நாமக்கலில் 6.15 மீட்டரிலிருந்து 9.34 மீட்டராகவும் கோவையில், 9.4 மீட்டரிலிருந்து 10.85 மீட்டராகவும் உள்ளது.

மேலும் சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, திருப்பூா், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நிலத்தடி நீா் மட்டம் 1 முதல் 2 மீட்டா் வரை கீழே சென்றுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 0.5 மீட்டா் மட்டுமே நீா்மட்டம் குறைந்துள்ளது. அதேசமயம் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடத்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அந்த மாவட்டங்களில் நிலத்தடி நீா்மட்டம் சுமாா் 2 மீட்டா் வரை உயா்ந்துள்ளது. இதேபோல செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூா், மயிலாடுதுறை , நீலகிரி, மதுரை, ராமாநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் நீா் மட்டம் சற்று உயா்ந்துள்ளது. இந்த மாவட்டங்களில் கடந்த வடகிழக்கு பருவமழையின் போது ஓரளவு மழை பெய்ததால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com