

முத்திரை கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (மே 12) அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில்,எவ்வித நியாமும் இன்றி பல மடங்கு முத்திரைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெருமாறும்,மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி வழிகாட்டு மதிப்பையும் முன்பிருந்த நிலைக்குத் தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொம்மை முதலமைச்சர்,விடியா திமுக அரசு,இருண்ட ஆட்சி,நிர்வாகத்திறமையற்ற ஆட்சி,கலெக்ஷன் - கரப்ஷன் - கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட அரசு என திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.