இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்திற்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும்: ராமதாஸ்

இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்திற்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்திற்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும்: ராமதாஸ்
Published on
Updated on
2 min read

விழுப்புரம்: இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்திற்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்ததாவது:

சமூகநீதி பற்றி சில கட்சிகள் பேசினாலும் தொடர்ந்து சமூக நீதி குறித்து விடாமல் பேசி வருவது பாமக தான். சமூக நீதி விவகாரத்தில் செய்த தவறுகளை திமுக திருத்தி அமைக்க வேண்டும்.

நான்காவது கட்டமாக மக்களவைத் தேர்தல் ஆந்திரம், ஒடிஸா போன்ற மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநானயக கூட்டணி வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார்.

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்பதை பாமக வலியுறுத்தி வருகிற நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அதனை மத்திய அரசு தான் செய்ய வேண்டுமென தமிழக அரசு தெரிவிக்கிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு பிகார் ஆந்திரம், கந்நாடகத்தில் நடத்தப்பட்டு தெலங்கானாவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் இடஒதுக்கீடு வழங்கி இருக்கலாம். ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் இடஒதுக்கீடு தமிழக அரசு வழங்கவில்லை. அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி மனு அளித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காததால் இடஒதுக்கீடு தொடர்பாக போராட்டம் நடத்தப்படும். இதற்தான தேதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

இடஒதுக்கீடு தொடர்பான போராட்டத்திற்கு விரைவில் தேதி அறிவிக்கப்படும்: ராமதாஸ்
ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்: சோனியா காந்தி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிட முடிவு செய்யப்படும். மேகதாதுவில் அணை கட்டுவோம் என அம்மாநில அரசு கூறுவது கண்டிக்கதக்கது. அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் அமைதி காத்து வருகிறார்.

கர்நாடகம் தண்ணீர் தராத நிலையில் குறுவை சாகுபடி செய்ய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் மாற்று சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். 8 மணி நேரம் கூட மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கவில்லை.

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகள் நனைந்தது குறித்து அதிகாரிகள் மீது விசாரணை செய்ய வேண்டும். அனைத்து நெல் ஒழுங்கு விற்பனைக் கூடத்தில் 10 ஆயிரம் மூட்டைகள் வைக்கும் அளவிற்கு குடோன் அமைக்க வேண்டும்.

திருவாரூர், திருவள்ளுவர், விழுப்புரம் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் தனிநபர் வருமானம் குறைந்து காணப்படுகிறது. தனிநபர் வருமானம் வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களில் பல வருடங்களாக குறைந்து உள்ளது. அதனால் இந்த மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைத்து தனிநபர் வருமானத்தை பெருக்கலாம். ஆனால் இதனை அதிமுகவும், திமுகவும் செய்யவில்லை.

மரம் வளர்ப்பினை மாபெரும் இயக்கமாக மாற்ற வேண்டும். அரிமா சங்கம், வனத்துறை இணைந்து மரம் வளர்ப்பினை மாபெரும் இயக்கமாக மாற்றவேண்டும்.

தமிழகத்தில் தெருவுக்கு தெரு கஞ்சா போதைப் பொருள்கள் தாளாரமாக கிடைப்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு நினைத்தால் ஒருவாரத்தில் கட்டுபடுத்தலாம் காவல் துறைக்கு தெரிந்தே கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திராவிலிருந்து கஞ்சா வருவதால் ஆந்திராவிற்கே சென்று கஞ்சா தோட்டங்களை போலீசார் அழிக்கலாம் அதனை செய்யவில்லை.

தமிழகத்தில் வெப்பத்தினால் இதுவரைக்கும் மூன்று, நான்கு பேர் ஸ்ட்ரோக் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். மின் தடை இல்லாமல் மின்சாரம் வழங்கவேண்டும். நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் உயிரிழப்பில் காவல் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இஸ்ஸாமியர்களுக்கு எதிராக தேர்தல் பிரசாரத்தில் இஸ்ஸாமியர்களுக்கு எதிராக மோடி பேசுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள் என்றார். அப்போது மாநில அமைப்புச் செயலாளர் அன்பழகன், மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com