மக்களவைத் தேர்தலின் நான்காவது கட்ட தேர்தல் நடந்து வருவதால், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி திங்களன்று ஏழை குடும்பங்களின் பெண்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அறிவித்தார்.
"வணக்கம், என் அன்பான சகோதரிகளே. சுதந்திரப் போராட்டம் முதல் நவீன இந்தியா உருவானது வரை பெண்கள் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இருப்பினும், இன்று, கடுமையான பணவீக்கத்துக்கு மத்தியில் நமது பெண்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர்.
அவர்களின் கடின உழைப்பு மற்றும் தவத்துக்கு நியாயம் செய்ய, காங்கிரஸ் ஒரு புரட்சிகர நடவடிக்கையை எடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் 'மகாலட்சுமி' திட்டத்தின் கீழ், ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒவ்வோர் ஆண்டும் 1 லட்சம் ரூபாய் வழங்குவோம்" என்று சோனியா காந்தி ஒரு விடியோ செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவாதங்கள் ஏற்கனவே கர்நாடகம் மற்றும் தெலங்கானாவில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ. தகவல் அறியும் உரிமை, கல்வி உரிமை அல்லது உணவுப் பாதுகாப்பு என எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சி நமது திட்டங்களின் மூலம் மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. எங்கள் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய உத்தரவாதம் இந்த மகாலட்சுமி திட்டம்.
இந்த கடினமான நேரத்தில், காங்கிரஸின் கை உங்களுடன் உள்ளது, இந்த கை உங்கள் நிலைமையை மாற்றும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் "என்று அவர் வலியுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற புகைப்படங்களை பதிவிட்ட ராகுல்: முடக்கிய இன்ஸ்டா!

மகளிா் இடஒதுக்கீடு அமலாகும் வரை ஓயமாட்டேன் - பிரதமா் மோடி
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




