தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்முந்தைய அரசுகளின் திட்டங்கள் தொடரும்! பேரவையில் முதல்வர் விஜய் உறுதிநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு! நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு! குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! விஜய் பேச்சுபுஸ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்யும் விஜய்! உதயநிதி கடும் விமர்சனம்! நம்பிக்கை வாக்கெடுப்பு! பேரவைக்கு வராமல் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்தவெகவில் குதிரை பேரம் நடந்தது; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதா
/

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

காங்கிரஸ் தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக..

News image

சோனியா காந்தி - DPS

Updated On :57 நிமிடங்கள் முன்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றதாக அக்கட்சியின் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணியளவில் மேதாந்ததா செரிமான மற்றும் கல்லீரல் பித்தநீர் அறிவியல் நிறுவனத்தில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது வருகை குறித்து மருத்துவமனை தரப்பிலிருந்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

வழக்கமான பரிசோதனை நிறைவடைந்த நிலையில் சோனியா காந்தி வீடுத் திரும்பினார்.

முன்னதாக, மார்ச் 24 அன்று, காய்ச்சல் காரணமாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் முழுவதும் பரவியிருந்த ஒருவகை தொற்றிலிருந்து குணமடைந்து, ஏழு நாள்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

Summary

Congress leader Sonia Gandhi visited Medanta Hospital in Gurugram for a routine check-up, party leader Jairam Ramesh said on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.