தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் நடைபெறும் நிலையில், மதிமுகவின் இரண்டு எம்.எல்.ஏ.க்களும் புறக்கணித்துள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் இன்று காலை முன்மொழியப்பட்டது.
இந்த தீர்மானத்தின் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்று வருகின்றது. காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, ஐயுஎம்எல், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து பேசினர்.
பாஜகவும், பாமகவும் வாக்கெடுப்பில் நடுநிலை வகிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். தேமுதிக, கொமதேக, மஜக, மமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மதிமுக எம்.எல்.ஏ.க்கள் சீர்காழி செந்தில்செல்வன், கடையநல்லூர் டி.எம். ராஜேந்திரன் ஆகிய இருவரும் இதுவரை சட்டப்பேரவைக்கு வரவில்லை. இவர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இவர்கள் இருவரும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் ஆவர். ஆகையால், இவர்கள் மீது கொறடா உத்தரவை மீறியதற்கான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
தவெக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான விஜய், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மே 11 ஆம் தேதி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
Vote of Confidence: MDMK MLAs Boycott, Stay Away from Assembly
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









