சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

சென்னையில் வெப்பத்தை தணித்த மழை..!

News image
Updated On :15 மே 2024, 4:23 pm

தென் தமிழகத்திலும், டெல்டா மாவட்டங்களிலும் நாளை(மே 16) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் நாளை மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சென்னையில் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நந்தனம், தியாகராய நகர், சைதாப்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், முகப்பேர், அண்ணாநகர், அம்பத்தூர் எஸ்டேட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், மழை பெய்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதிய வேளையில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக நெல்லையில் மழை பெய்து வருகிறது.

அதேபோல், தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.