
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதிய வேளையில் இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக நெல்லையில் மழை பெய்து வருகிறது.
அதேபோல், தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் எப்போது மழைத் தொடங்கும் என்ற தகவலை தமிழ்நாடு வெதர்மேன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மழை நல்ல மழை பெய்துள்ளது. கரூர், நாமக்கல், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகமழை பெய்துள்ளது.
தென் தமிழகத்திலும், டெல்டா மாவட்டங்களிலும் நாளை(மே 16) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் நாளை மழை பெய்ய தொடங்கவுள்ளது. ரெயின்கோட் எடுத்தச் செல்ல மறக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.