
கொடைக்கானலில் 61-ஆவது மலா்க் கண்காட்சி, கோடை விழா வருகிற நாளை(மே 17) தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இந்த விழாவில் வருகிற 17-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தோட்டக் கலைத் துறை சாா்பில் மலா்க் கண்காட்சியும், சுற்றுலாத் துறை சாா்பில் கோடை விழாவும் நடத்தப்படும்.
பாரம்பரிய, கிராமியக் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சிறியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ. 15-ல் இருந்து ரூ. 35-ஆகவும், பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ. 75-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணம் மே 26 ஆம் தேதி வரை 10 நாள்கள் அமலில் இருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.