ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

4 மாவட்டங்களில் தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு

News image
கோப்புப் படம்.
Updated On :17 மே 2024, 1:29 pm

DIN

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து 4 மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது.

தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று(மே 17) கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், நாளை (மே 18) தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே மே 19, 20 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்ட "ரெட் அலர்ட்"யை வானிலை ஆய்வுமையம் திரும்பப்பெற்றது.

இந்த நிலையில் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து 4 மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் உள்ளது. ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் அடிப்படையில் 300 வீரர்கள் கொண்ட 10 குழுக்கள் 4 மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர். கன்னியாகுமரி 90, நீலகிரி 90, கோவை 30, நெல்லையில் 90 வீரர்கள் கொண்ட பேரிடர் மீட்புக்குழு ஆயத்த நிலையில் உள்ளது என மாநில பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.