
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.
விழுப்புரம் வட்டம், வளவனூர் அடுத்த அனுச்சம்பாளையம் இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சின்னதம்பி மனைவி சகுந்தலா(60).
கணவர் இறந்துவிட்ட நிலையில் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் சகுந்தலா கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் வீட்டினுள் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.
தகவலறிந்த விழுப்புரம் டிஐஜி திஷா மித்தல், எஸ்.பி. தீபக்சிவாச் மற்றும் வளவனூர் போலீஸார் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து வளவனூர் போலீஸார் கொலையான பெண்ணின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்குகாக விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சகுந்தலா நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.