காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிப்பு!

குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :23 மே 2024, 12:56 pm

DIN

குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவியின் கரைகளில் பாதுகாப்புப் பணிகள் நடைபெறுவதால் சில நாள்களுக்கு பின்னர் குளிக்க அனுமதி வழங்கப்படும்.

மேலும், மற்ற அருவிகளில் இன்று(மே 23) முதல் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்குவது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் முன்னதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தொடர் கனமழை காரணமாக, குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட 5 முக்கிய அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கான தடை 7வது நாளாக தொடர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.