சென்னை, புறநகரில் 108 டிகிரி வெயில் கொளுத்தும்: வெதர்மேன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிதாக மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ரீமெல் புயல் காரணமாக கடந்த வாரம் வெப்பம் தணிந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் வெப்ப அலை வீசக்கூடும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் விடுத்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதீப் ஜான்,
“சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும். மேலும், ராணிப்பேட்டை, வேலூரின் சில பகுதிகளில் வெப்ப அலை வீசக்கூடும்.
தமிழகத்தின் பிற பகுதிகளில் வெப்ப அலை இருக்காது. கன்னியாகுமரியில் நினைத்த அளவு மழை பெய்ய வாய்ப்பில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...