
சேலம், அழகாபுரம், பெரியபுதூா் பகுதியில் வசித்து வரும் பூஜாகுமாரி (29) என்பவா் ஒடிஸா மாநிலத்தில் இருந்து வேலைக்காக சேலத்துக்கு வந்தார்.
சக்திகுமாா் என்பவரை 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா். பூஜாகுமாரி கா்ப்பிணியாக இருந்த போது சக்திகுமாா் அவரைவிட்டு பிரிந்து வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாா்.
பூஜாகுமாரிக்கு பிறந்த லட்சுமி குமாரி என்ற பெண் குழந்தையை அவரது பெற்றோா் கவனித்து வந்தனா்.
இந்த நிலையில், சிறுமி லட்சுமி குமாரிக்கு துரித(பொருந்தா) உணவு பிடிக்கும் என்பதால் வழக்கமாக சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்ததாகவும், சனிக்கிழமை இரவு துரித உணவு(ஃப்ரைடு ரைஸ்), சப்பாத்தி, கத்தரிக்காய் கறி உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்ட பிறகு சிறுமிக்கு மூக்கில் இருந்து ரத்தம் வந்ததாகவும் சிறுமியின் தாயார் பூஜாகுமாரி தெரிவித்தார்.
உடனடியாக தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி பூஜாகுமாரி, ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த அழகாபுரம் போலீஸாா் சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
பிரேதப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், அவரது உடலிலிருந்து மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இறப்பின் சரியான காரணத்தை தீர்மானிக்க இந்த மாதிரிகள் ஆய்வுக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
துரித உணவை வழக்கமாக சாப்பிடுவது செரிமானத்தை பாதித்து மூக்கடைப்பு மற்றும் மூக்கில் ரத்தம் கசிதல் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரித்து வருவதாகவும், அனுப்பப்பட்ட மாதிரிகளின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.