511 முகாம்கள் மூலம் 92,003 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: தமிழக அரசு
511 முகாம்கள் மூலம் 92,003 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கிராம ஊராட்சிகளில் போதுமான தகவல் தொழில்நுட்பக் கட்டுமானத்தை உறுதி செய்திடும் விதமாக 12,525 கிராம ஊராட்சிகளிலும் கணினிகள், பிரிண்டர்கள் மற்றும் தடையில்லா மின்கலன்கள் (UPS) சாதனம் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி மற்றும் கட்டட அனுமதி போன்ற குடிமக்கள் நலன் சார்ந்த அரசு சேவைகளை மக்கள் இணையதளம் வாயிலாக எளிதில் பெற உதவும் வகையில் ஊராட்சிகளில் மின் ஆளுமைக்கான Vptax Portal நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் நிதிவரம்பு ரூ.2 லட்சம் என்பது ரூ.5 லட்சமாகவும், வட்டார ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் என்பது ரூ.25 லட்சமாகவும் மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ20 லட்சம் என்பது ரூ.50 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை,
* மீண்டும் உத்தமர் காந்தி விருது
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
* ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
* சாதிவேறுபாடுகளை நீக்க கிராமப்புறங்களிலும் எரிவாயு தகன மேடை.
* ஊரக வீடு வழங்கும் திட்டங்கள் (Rural Housing)
* பெரியார் நினைவு சமத்துவபுரம்
* நமக்கு நாமே திட்டம் (ஊரகம்)
* சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்
* நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம்
* தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)
* நம்ம ஊரு சூப்பரு பிரசாரம்:
* ஜல் ஜீவன் திட்டம்
* புதிய சுய உதவிக் குழுக்கள் அமைத்தல்
* சிறப்பு சுய உதவிக் குழுக்கள்
வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் பணியமர்வு
45,150 நகர்ப்புர ஏழை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, ரூபாய் 89.30 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
511 வேலைவாய்ப்பு முகாம்கள் இளைஞர் திறன் விழாக்கள் ரூ.4.01 கோடி செலவில் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு 92,003 இளைஞர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.
சுய வேலை வாய்ப்புத் திட்டம் தனிநபர் தொழில் முனைவு (SEP-I)
சுய வேலை வாய்ப்பு தனிநபர் தொழில் முனைவு திட்டத்தின் கீழ் 21,190 தனி நபர்களுக்கு ரூபாய் 117.00 கோடியும், 12,503 குழுக்களுக்கு ரூபாய் 428.82 கோடியும் வட்டி மான்யத்துடன் கூடிய வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.
நகர்ப்புரங்களில் செயல்படும் 1,29,630 சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 5,266.21 கோடி வட்டி மானியத்துடன் கூடிய வங்கி கடன் சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நகர்ப்புரங்களில் செயல்படும் 3,34,763 சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 23,675.15 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.