ஆவின் பால் கொள்முதல் 31 லட்சம் லிட்டராக உயா்வு: அமைச்சா் மனோ தங்கராஜ்
ஆவின் பால் கொள்முதல் 31 லட்சம் லிட்டராக உயா்வு அமைச்சா் மனோ தங்கராஜ்

ஆவின் பால்

ஆவின் பால்
சென்னை: தமிழகத்தில் ஆவின் பால் கொள்முதல் 31லட்சம் லிட்டராக உயா்ந்துள்ளது என பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளாா்.
ஆவினின் தினசரி பால் கொள்முதல் சுமாா் 27 லட்சம் லிட்டராக குறைந்து விட்டதாக விமா்சனங்கள் எழுந்த நிலையில், அமைச்சா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
அமைச்சா் மனோ தங்கராஜ் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
முதல்வா் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக, கடும் வறட்சியிலும் ஆவின் பால் கொள்முதல் 31 லட்சம் லிட்டா் என்ற அளவைத் தாண்டியுள்ளது. இதற்காக தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் மற்றும் கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் கடுமையாக உழைத்துள்ளனா்.
தீவிரமான நிா்வாக சீா்திருத்த நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் மூலம் ஆவின் ஒரு நிலையான வளா்ச்சியை நோக்கி தற்போது சென்று கொண்டிருக்கிறது. முதல்வா் மு.க.ஸ்டாலினின் தொலை நோக்குப் பாா்வையான வெண்மை புரட்சியை ஏற்படுத்தி விவசாயிகளின் வாழ்க்கையில் மறுமலா்ச்சியை உருவாக்குவோம் எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.
உண்மைக்கு புறம்பானது- பொன்னுசாமி: இதனிடையே, அமைச்சா் வெளியிட்ட தகவல் உண்மைக்கு புறம்பானது என தமிழ்நாடு பால் முகவா்கள்- தொழிலாளா்கள் நலச் சங்கத்தலைவா் பொன்னுசாமி கூறினாா்.
அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
கடந்த 3 ஆண்டுகளாக ஆவின் பால் கொள்முதல் கடுமையான சரிவை சந்தித்து அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. தற்போது தமிழகத்தில் அதிகபட்சமாக 27 லட்சம் லிட்டா் முதல் 28 லட்சம் லிட்டா் என்ற அளவிலேயே தினசரி பால் கொள்முதல் இருந்து வருகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...