கோபி கிருஷ்ணன், மகன் கார்த்திக்.
கோபி கிருஷ்ணன், மகன் கார்த்திக்.

கட்டில் கால்கள் முறிந்து விழுந்ததில் தந்தை, மகன் பலி!

திண்டுக்கல் அருகே இரும்பு கட்டில் கால் முறிந்து விழுந்ததில் தந்தை, மகன் இருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

திண்டுக்கல் அருகே இரும்பு கட்டில் கால் முறிந்து விழுந்ததில் தந்தை, மகன் இருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் (வயது 35) தையல் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லோகேஸ்வரி (வயது 30) நத்தம் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவர்களுக்கு கார்த்திக் ரோஷன் வயது 9, யஸ்வந்த் 6 என இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று, இரவு வழக்கம் போல் கோபி கிருஷ்ணன், மகன் கார்த்திக்கும் டிவி பார்த்துக் கொண்டு இரும்பு கட்டிலில் தூங்கி உள்ளனர்.

அப்போது மனைவி லோகேஸ்வரி மருத்துவமனை பணிக்கு செல்வதற்காக வெகு நேரமாகியும் மாடியில் இருந்து வராத தனது மகனையும் கணவரையும் தேடி மேலே சென்று உள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் முதல் பேரவைத் தலைவர் அப்துல் ரஹீம்!

அப்போது கணவன், மகன் இருவரும் இறந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி லோகேஸ்வரி சாணார்பட்டி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

மேலும், காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் இரும்பு கட்டில் கால்களில் உள்ள நான்கு போல்ட்டுகளும் இல்லாததால் இரும்பு கட்டில் கால் முறிந்து விழுந்ததில் கட்டிலின் மேல்பகுதியில் உள்ள இடைவெளியில் இருவரின் கழுத்துப் பகுதி நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com