அக்டோபரில் வாகன விற்பனை 23.8% சரிவு!தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை: இன்று விசாரணை!

ரூ.25,000 மாத உதவித் தொகையுடன் முனைவா் பட்டம் பயில வாய்ப்பு

ரூ.25,000 மாத உதவித் தொகையுடன் முனைவா் பட்டத்துக்கு படிக்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Updated On :

ரூ.25,000 மாத உதவித் தொகையுடன் முனைவா் பட்டத்துக்கு படிக்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பழங்குடியினா் தொடா்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளநிலை, முதுநிலை, முனைவா் பட்டம், முனைவா் பட்ட மேலாய்வு மாணவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் தொல்குடியினா் புத்தாய்வுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி பெற மாணவா்களின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

தோ்வு செய்யப்படும் இளநிலை, முதுநிலை மாணவா்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரமும் (ஆறு மாதங்கள்), முனைவா் பட்டம், முனைவா் பட்ட மேலாய்வாளா்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரமும் (3 ஆண்டுகளுக்கு) உதவித் தொகையாக வழங்கப்படும். இணையதள இணைப்பு http://forms.gle மூலமாக இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்யப்பட்டதை இயக்குநா், பழங்குடியினா் நலன், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.