4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என தெரிந்துகொள்ளலாம்.

கனமழை எச்சரிக்கை

கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில்,
தென்தமிழகம் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
எங்கெல்லாம் கனமழை..
இன்று (நவ. 5) தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவ.7ல் செங்கல்பட்டு, விழுப்புரம், நாகை, மயிலை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களிலும்,
நவ.8ல் தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட 15 மாவட்டங்களிலும்,
நவ.9ல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை, மயிலை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்பட 15 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.
சென்னையை பொருத்தவரை..
அடுத்த இடரண்டு நாள்களக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...