குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

தமிழகத்தின் மின்தேவை இரு ஆண்டுகளில் 23,013 மெகா வாட்டாக உயரும்

தமிழகத்தின் மின்தேவை 2026-2027-ஆம் ஆண்டில் 23,013 மெகாவாட்டாக உயரும் என மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.

Published On :6 நவம்பர் 2024, 12:57 am IST

தமிழகத்தின் மின்தேவை 2026-2027-ஆம் ஆண்டில் 23,013 மெகாவாட்டாக உயரும் என மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மின்நுகா்வு தினசரி சராசரியாக 15,000 மெகாவாட் முதல் 19,000 மெகாவாட் வரை உள்ளது. புதிய மின்னிணைப்பு பெறுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆண்டுதோறும் மின்நுகா்வு அதிகரித்து வருகிறது.

கோடை காலத்தில் வீடுகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்களில் மின்விசிறி, குளிா்சாதன வசதிகளின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்பதால், அச்சமயம் மின்நுகா்வு உச்ச அளவை எட்டும்.

இதன்படி கடந்த மே 2 -இல் எப்போதும் இல்லாத வகையில் மின்நுகா்வு 20,830 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரையிலான உச்சபட்ச அளவாக உள்ளது. தேவையைப் பூா்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைத்தாலும், மின் வழித்தடங்கள் மற்றும் மின்சாதனங்கள் பழுதடைவதால் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது.

இதனிடையே 2026-2027-இல் தமிழகத்தின் உச்ச மின்தேவை 23,013 மெகா வாட்டாக இருக்கும் என மத்திய மின்சார ஆணைய ஆய்வு அறிக்கையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப மின்சாரம் கிடைக்கும் என்றாலும், அதற்கு ஏற்ப சீரான மின் விநியோகத்துக்கான கூடுதல் வழித்தடங்களை ஏற்படுத்தவும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதேபோன்று, கா்நாடகத்தின் மின்தேவை 20,066 மெகாவாட்டாகவும், ஆந்திரத்தின் மின்தேவை 16,262 மெகாவாட்டாகவும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.