சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நடந்த உண்மையைத்தான் அமரன் படத்தில் சொல்லியுள்ளனர் - எல்.முருகன்

நடந்த உண்மையைத்தான் அமரன் படத்தில் சொல்லியுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

News image

எல்.முருகன்(கோப்புப்படம்)

Updated On :9 நவம்பர் 2024, 3:14 pm

DIN

நடந்த உண்மையைத்தான் அமரன் படத்தில் சொல்லியுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை சென்னையில் பேசியதாவது, ஜம்மு-காஷ்மீரில் நடந்ததை, உண்மை கருத்துகளை அமரன் படத்தில் சொல்லியுள்ளனர்.

அமரன் போன்ற நல்ல படங்களை வரவேற்பது நாட்டின் மீது நாம் வைத்துள்ள மரியாதை. ஒரே நாடு, ஒரே சினிமா, வடக்கு, தெற்கு என பேதம் இல்லாமல் சினிமாத் துறையை எடுத்து செல்ல பணிகள் மேற்கொண்டு வருகிறோம்.

சென்னை மற்றும் பெங்களூருவில் ஹாலிவுட் திரைப்படத்திற்கு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெறுகின்றன. இது அதிகரிக்க வேண்டும். ஓடிடிக்கு புதிய ஒளிபரப்பு கொள்கை மூலம் சென்சார் கொண்டு வரப்படும்.

கோவா சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20 முதல் 28 வரை 8 நாட்கள் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சிவகாா்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம், தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியானது. கமல்ஹாசன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய ராணுவத்தில் பணியாற்றி தீவிரவாதிகளுக்கு எதிரான மோதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜா் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு படத்தின் கதை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.