சென்னை ரிப்பன் மாளிகையை மக்கள் சுற்றிப் பார்க்கலாம்!

ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க மக்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு.
chennai ribon building
ரிப்பன் மாளிகை
Published on
Updated on
1 min read

ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க மக்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

சென்னையில் பழமைவாய்ந்த ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ரிப்பன் மாளிகையை மக்கள் சுற்றிப்பார்க்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

'சிங்கார சென்னை 2.0-ன் கீழ் சென்னை மக்கள், ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க விரும்பினால் commcellgcc@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது 9445190856 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம்.

தனி நபராகவோ அல்லது பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் வாயிலாக கூட்டாகவோ அனுமதி கோரலாம்.

ரிப்பன் மாளிகையின் வரலாறு அதன் கட்டுமானம், மாநகராட்சி செயல்படும் முறை பற்றி தெரிந்துகொள்ளலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ரிப்பன் மாளிகை கடந்த 1909 ஆம் ஆண்டு அப்போது வைசிராயாக இருந்த மிண்டோ பிரபுவால் அடிக்கல் நாட்டப்பட்டது. 1913 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு பின்னர் பயன்பாட்டுக்கு வந்தது. லோகநாத முதலியார் என்பவர் இதனை ரூ. 7.50 லட்சம் செலவில் கட்டிக்கொடுத்துள்ளார்.

ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் ரிப்பன் பிரபுவின் பெயர் கட்டடத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு இந்த கட்டடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com