பாகிஸ்தானில் சில நகரங்களில் பொதுமுடக்கம்! ஏன் தெரியுமா?

பாகிஸ்தானில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் அங்குள்ள சில நகரங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் சில நகரங்களில் பொதுமுடக்கம்! ஏன் தெரியுமா?
AP
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் அங்குள்ள சில நகரங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் காற்று மாசு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துக் காணப்படுகிறது.

பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்தான் நகரத்தில் காற்றின் தரக் குறியீடு இன்று காலை 8 மணிக்கு 2,135 ஆக பதிவாகியுள்ளதால் அந்த நகரம் முழுவதும் புகை மூட்டமாகக் காட்சியளிக்கிறது.

காற்றில் உள்ள பி.எம். 2.5 துகள் அளவு 947 மைக்ரோகிராமாக உள்ளது. இது வெறும் 5 கிராம் மட்டுமே இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் 189.4 மடங்கு காற்றின் தரம் மோசமாக உள்ளது.

இதனால் அங்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

AP

முல்தானின் சுற்றுவட்டார மாவட்டங்களான லாகூர், சியால்கோட், பைசலாபாத், சினியோட், குஜ்ரான்வாலா ஆகிய நகரங்களிலும் காற்று மாசு அதிகரித்துள்ளதால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபின் அனைத்து முக்கிய நகரங்களில் உள்ள பூங்காக்கள், அருங்காட்சியகங்களை நவ. 17 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. காய்கறிச் சந்தைகளை இரவு 8 மணிக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

18 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12 மணிக்கு லாகூரில் காற்றின் தரக் குறியீடு 1,000 ஆகப் பதிவாகியுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் காற்று மாசைக் கட்டுப்படுத்த குப்பைகளை, கழிவுகளை எரிப்பது உள்ளிட்டவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப் மாநிலம், தலைநகர் தில்லி உள்ளிட்ட வட மாவட்டங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com