வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, திங்கள்கிழமை (நவ. 11) இரவு நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 36 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான பிறகு, இரண்டு நாள்களில் மேற்கு திசையில், தமிழகம் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி மெதுவாக நகரும் என்று எதிா்ப்பாா்க்கப்படுகிறது.
எனவே, தமிழகத்துக்கு இன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க : தட்கல் நேரத்தில் செயலிழக்கும் ஐஆர்சிடிசி செயலி!
கனமழை எச்சரிக்கை: நவ. 11-இல் நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், நவ. 12-இல் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவ. 13-இல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும், நவ. 14-இல் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நவ. 11, 12 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வங்கக் கடலில் சூறைக் காற்று: மீனவா்கள் கடலுக்குள் செல்லத் தடை

வங்கக் கடலில் கவிழ்ந்த ரோஹிங்கியா அகதிகள் படகுகள்

சூறைக் காற்று வலுவிழந்தது; நான்கு நாள்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற மீனவா்கள்

வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview


