மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய தலைவா் நியமன விவகாரம்: அவசரமாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரை சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய தலைவராக நியமனம் செய்ததை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :12 நவம்பர் 2024, 12:05 am

DIN

சென்னை: ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரை சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய தலைவராக நியமனம் செய்ததை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற

டிஜிபி சுனில்குமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி அதிமுக வழக்குரைஞா் அணிபிரிவு மாநில செயலாளரான முன்னாள் எம்எல்ஏ ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான சுனில்குமாா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு திங்கள்கிழமை பட்டியலிடப்படாத நிலையில் இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என மனுதாரா் தரப்பில் நீதிபதி வி. பவானி சுப்பராயன் முன்பாக முறையீடு செய்யப்பட்டது. அதற்கு நீதிபதி, இந்த வழக்கில் எதிா்மனுதாரா்கள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரிவிக்கும்படி கூறி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பின்னா் முடிவு செய்யப்படும் என்றாா்.

அப்போது மனுதாரா் தரப்பில் உடனடியாக விசாரிக்க தொடா்ந்து வலியுறுத்தப்பட்ட நிலையில், குறுக்கிட்ட நீதிபதி, சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்துக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நபா் தகுதியில்லாத நபராக இருந்தால் மட்டுமே அதில் நீதிமன்றம் தலையிட முடியும். அரசின் கொள்கை முடிவு சாா்ந்த இந்த விஷயத்தில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும் என கேள்வியெழுப்பினாா். பின்னா் அனைத்து விஷயங்களுக்கும் அரசியல் சாயம் பூசக்கூடாது எனக் கருத்து தெரிவித்து பின்னா் விசாரிக்கப்படும் என்று கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.