மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

வடதமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி; புயலாகுமா? பாலச்சந்திரன் பதில்!

காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகத்தை நோக்கி மெதுவாக நகர்வதாக பாலச்சந்திரன் விளக்கம்.

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்

Published On :

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று மதியம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியிருந்த நிலையில் அது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, வடதமிழகத்தை, தெற்கு ஆந்திரம் ஒட்டிய கடற்பகுதியில் நீடிப்பதால் நாளை மற்றும் நாளை மறுநாள் வட தமிழக மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்று கேட்டதற்கு, இது ஏற்கனவே, கடற்கரையை ஒட்டி நிலவி வருவதால், புயலாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. அதேவேளையில், இது மிகவும் பலவீனமான மெதுவாக நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்பதால் இதே நிலையில், கரையைக் கடந்து செல்லும், இதனால் தொடர்ந்து 2 அல்லது 3 நாள்களுக்கு மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

பொதுவாகப் பார்த்தால், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மிகவும் பலவீனமான, மெதுவாக நகர்கிறது. எனவே, இது வலுவடையாமல், பலவீனாமான காற்றழுத்த தாழ்வு நிலையாகவே கடந்துசென்றுவிடும். இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்றும் பாலச்சந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதனால், இன்று முதல் 4 நாள்களுக்கு தமிழகம், புதுவை காரைக்காலில் மிதமான மழை முதல் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழையைப் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் டெல்டா மாவட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளார்.

காற்றழுத்த தாழ்வு பகுதி

காற்றழுத்த தாழ்வு பகுதி

வடகிழக்குப் பருவமழை..

வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை அக். 1 முதல் இன்று காலை வரை 256 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. வழக்கமாக இந்தக் காலக்கட்டத்தில் பெய்ய வேண்டிய மழை அளவு 259 மி.மீ. எனவே, இது இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாகப் பெய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.