மார்ட்டின் குழுமம் சார்பில் ரூ.7 கோடியில் புதுப்பொலிவு பெற்ற கவுண்டம்பாளையம் மாநகராட்சிப் பள்ளி!
மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 7 கோடி நிதி வழங்கி புதிய கட்டிடங்களை கட்டிக் கொடுத்துள்ளது மார்ட்டின் குழுமம்


கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 7 கோடி நிதி வழங்கி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, புதிய கட்டடங்களை கட்டிக் கொடுத்துள்ளது மார்ட்டின் குழுமம்.
இங்கு 413 மாணவர்கள் படித்து வருகின்றனர். நவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெற்ற இந்தப் பள்ளியை பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மார்ட்டின் குழுமத்தின் இயக்குனர் லீமா ரோஸ் மார்ட்டின், நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், செயல் இயக்குனர் டைசன் மார்ட்டின், அரசு அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மார்ட்டின் குழுமத்தின் தலைமைக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கவுண்டம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு, நவீன முறையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளியின் நுழைவாயிலிலிருந்து வகுப்பறைகள்வரை, பள்ளி வளாகத்தின் ஒவ்வொரு இடமும் மேம்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு படைப்பாற்றல், புதுமை மற்றும் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
இங்கு டிஜிட்டல் கற்றல் கருவிகளுடன் கூடிய மாணவர்கள் வசதியாக அமர்ந்து படிப்பதற்கான நவீன வகுப்பறைகள்; மாணவர்களின் திறமையை வளர்க்கும் விதமாக நவீன அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள்; ஏராளமான புத்தகங்களுடன் கூடிய அதிநவீன டிஜிட்டல் நூலகம்; 3 ஆயிரம் சதுர அடி பரப்பிலான விளையாட்டு மைதானம்; மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் கலை பண்பாட்டு இடங்கள்; இயற்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பூர்வீக தாவரங்களுடன் கூடிய இயற்கை எழில் கொஞ்சும் பகுதி; அனைத்து வசதிகளுடன் கூடிய சாப்பாட்டு அறை; சிறுவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கென தனித்தனியான சுகாதாரமான கழிப்பறைகள், மாணவர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 24 மணி நேர பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் விளக்குகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை இப்பள்ளிக்கு மார்ட்டின் குழுமம் 7 கோடி ரூபாய் செலவில் செய்து கொடுத்துள்ளது.

திறப்புவிழாவின்போது..
இந்நிகழ்ச்சியில் மார்ட்டின் குழுமத்தின் நிர்வாகஇயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேசுகையில்,
''பொருளாதார ரீதியாக பின் தங்கிய குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதே எங்கள் குழுமத் தலைவரின் உயரிய எண்ணமாகும். இந்த முயற்சியானது எங்கள் பள்ளி தத்தெடுப்பு திட்டத்தின் முதல் தொடக்கமாகும். ஒவ்வொரு குழந்தையும் உலகத்தரம் வாய்ந்த கல்விக்கு தகுதியானவர்கள். மேலும் அரசுப் பள்ளிகளை நவீன கற்றல் மையங்களாக நாங்கள் மாற்ற இருக்கிறோம். பள்ளிகளின் உள்கட்டமைப்பில் மட்டுமல்ல, மாணவர்கள் இடையே படைப்பாற்றல், விமர்சன சிந்தனை மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றிலும் கவனம் செலுத்த உள்ளோம்'' என்றார்.

பள்ளி மாணவ, மாணவிகளுடன் அமைச்சர்
பின்தங்கிய பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் கற்றல் சூழலை வழங்குவதன் மூலம் அவர்களின் முழுதிறனை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் இக்குழுமம் உறுதியுடன் உள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்தரக் கல்வியை வழங்குவதையும் அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதையும் மார்ட்டின் குழுமத்தின் பள்ளி தத்தெடுப்புத் திட்டம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள வணிக குழும நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் மார்ட்டின் குழுமம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தலைவர் சாண்டியாகோ மார்ட்டினால் துவக்கப்பட்டது.
இந்த குழுமம் சுகாதாரம், கல்வி, மாற்று எரிசக்தி, ஊடகம், ரியல் எஸ்டேட், ஜவுளி, ஓட்டல், விவசாயம், மென்பொருள், தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. கார்ப்பரேட் சமூகப் பொறுப்பின் கீழ் பள்ளிகள் தத்தெடுப்பை தங்களின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக இக்குழுமம் கருதுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...