இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்!

கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்!

News image
மருத்துவர்கள் போராட்டம்
Updated On :13 நவம்பர் 2024, 10:11 am

DIN

சென்னை: சென்னையை அடுத்த கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துச் சம்பவத்தைக் கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவமனையில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மீது நோயாளிகளின் உறவினர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகிவரும் நிலையில், தமிழகத்தில், மருத்துவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடந்திருப்பது மருத்துவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும், அரசு மருத்துவர்கள் காலவரையற்றப் போராட்டத்தை அறிவித்தனர். உயிர்காக்கும் சிகிச்சைகள் தவிர மற்ற அனைத்துத் துறை மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்ப்பட்டது.

தொடர்ந்து, அரசு மருத்துவர்கள் சங்கத்துடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்து தனது தாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தும் குணமடையவில்லை என்ற அதிருப்தியில், அவரது மகன், அரசு மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், தனியார் மருத்துவமனைக்கு தனது தாயை அழைத்துச் சென்றபோது, அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், இளைஞர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

பணியில் இருந்த அரசு மூத்த மருத்துவர் ஒருவர் மீது, நோயாளியுடன் வந்தவர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அவரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர் மா. சுப்ரிமணியன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து, மருத்துவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர். அவரது தலையில் நான்கு இடங்களில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்துள்ளன.

மருத்துவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.