கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இயந்திரக் கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்

ஹைதராபாதிலிருந்து திருப்பதி சென்ற இண்டிகோ விமானம், இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்டது.

News image
இண்டிகோ விமான சேவை பாதிப்பு
Updated On :16 நவம்பர் 2024, 8:36 pm

Din

ஹைதராபாதிலிருந்து திருப்பதி சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை தரையிறக்கப்பட்டது.

ஹைதராபாதிலிருந்து சனிக்கிழமை திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்ற இண்டிகோ ஏா்லைன்ஸ் பயணிகள் விமானம், திருப்பதி வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தாா். இதையடுத்து, விமானத்தை சென்னை விமான நிலையத்துக்கு கொண்டுவந்து விமானி பத்திரமாக தரையிறக்கினாா்.

விமானியின் துரித நடவடிக்கை காரணமாக 169 பயணிகள் உள்பட 177 போ் உயிா் தப்பினா். பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்பட்டு சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்கவைக்கப்பட்டனா்.

பின்னா், பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.