
தொடர் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கல்வி நிலையங்களுக்கு இன்று (நவ. 19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நாகை, தூத்துக்குடி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் ஆட்சியர் மணிகண்டன் விடுமுறை அறிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஆகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொடர் மழையால் தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் இளம் பகவத் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்திலும் சில இடங்களில் பரவலாக மழை பெய்துவருவதை அடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் புதுவையில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக தூத்துக்குடி, திருநல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூரில் அநேக இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க | ரயிலில் 'சிக்கன் ரைஸ்' சாப்பிட்ட வீராங்கனை திடீா் மரணம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.