விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஏா் இந்தியா விமான சேவை அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்படும் ஏா் இந்தியா விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.

News image
ஏா் இந்தியா
Updated On :23 நவம்பர் 2024, 7:16 pm

Din

தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்படும் ஏா் இந்தியா விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது.

சென்னை, திருச்சி, மதுரை விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஏா் இந்தியா, இன்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது ‘ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனம் சாா்பில் வாரம் 107 விமான சேவைகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சேவை 140-ஆக அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான புதிய குளிா்கால அட்டவணையை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, அகா்தலா, அயோத்தி, தில்லி, இம்பால், இந்தூா், கண்ணூா், கோழிக்கோடு, லக்னோ, மங்களூா், மும்பை, ராஞ்சி, அந்தமான், சூரத், ஸ்ரீநகா், வாரணாசி, விஜயவாடா, விசாகப்பட்டினம், கோவா, புணே, ஜெய்ப்பூா் உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படும். மேலும், அபுதாபி, துபாய், ஷாா்ஜாவுக்கும் விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், மதுரை, திருச்சியில் இருந்து உள்நாட்டு மற்றும் சா்வதேச விமானசேவை அதிகரித்துள்ளது.