சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ. 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள், அதனை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய புயல் சின்னம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றபின் வடகிழக்கு மற்றும் டெல்டா பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை 27ஆம் தேதிவரை விட்டுவிட்டு அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக நகர்ந்து செல்வதால் நவ.30-ம் தேதி வரை மழை தொடர்ந்து பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ. 27) விடுமுறை?