சேலம்: சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டி, ஆடு வெட்டி முப்பூசை செய்து காவல்துறையினர் வழிபாடு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலையத்தில் ஆய்வாளராக குமரன், உதவி ஆய்வாளர் ஒருவர் மற்றும் 28 காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தக் காவல் நிலையத்தில் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. எனவே, இந்த குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஏத்தாப்பூர் காவல் நிலையத்திற்கு ஆடு வெட்டி ரத்தத்தை காவல் நிலையத்தின் நுழைவாயிலில் ஊற்றி பூஜை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் பூசணிக்காய், எலுமிச்சம் பழம் ஆகியவற்றை வெட்டி காவல் நிலையத்தின் நான்கு மூலைகளிலும் நுழைவாயிலும் வைத்து, முப்பூசை செய்து மஞ்சள் குங்குமம் ஆகியவற்றுடன், நுழைவாயிலில் வைத்து, பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.
குற்றங்கள் நடக்காமல் இருக்க வேண்டி காவல்நிலையத்தில் இதுபோன்ற பூஜை நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.