புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 28) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி, காரைக்காலில் நேற்று அதிகாலை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
புயல் சின்னம்
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடைந்து வருகிறது. இந்த புயல் சின்னம் விரைவில் புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தப் புயலுக்கு ஃபெங்கல் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
மேலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 28) விடுமுறை அறிவித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | புயல் சின்னம் எதிரொலி: புதுச்சேரி கடற்கரை செல்லும் வழிகள் மூடல்