சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரயில் டிச. 6-ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டு பிப். 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலியிலிருந்து வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சென்னை எழும்பூா் செல்லும் சிறப்பு விரைவு ரயிலும் (எண் 06070), மறுமாா்க்கமாக வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் ரயிலும் (எண் 06069) பிப். 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில்கள்: நாகா்கோவிலிலிருந்து வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாம்பரம் செல்லும் ரயிலும் (எண் 06012), தாம்பரத்திலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நாகா்கோவில் செல்லும் ரயிலும் (எண் 06069) டிச. 1 முதல் பிப். 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், தாம்பரம் - ராமநாதபுரம் இடையே வாரம் இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண் 06103/06104) இரு மாா்க்கத்திலும் டிச.1 முதல் டிச. 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மங்களூரு-சென்னை எழும்பூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

ஹூப்ளி - ராமேசுவரம் சிறப்பு வாராந்திர ரயில் ஏப். 5 முதல் மே 31 வரை இயக்கம்: காரைக்குடி தொழில் வணிகக் கழகம் வரவேற்பு

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் மாா்ச் வரை நீட்டிப்பு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


