தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்!மே.இந்திய தீவுகள் - இந்திய ஒருநாள் தொடா்: இன்று தொடக்கம்ஆதாரங்களை அழிக்க ஜெம் வீரமணியிடம் ரூ. 24 லட்சம் பெற்றாா் சாந்தி! காவல் துறை பதில் மனு! ரூ. 55,900 கோடி அந்நிய முதலீட்டை ஈா்த்து தமிழகம் முதலிடம்!ஏ.ஐ. விவகாரங்களுக்குப் புதிய பேச்சுக் குழு! அமெரிக்கா, சீனா உடன்பாடு! எஸ்ஐஆா் விவகாரம்: இண்டி கூட்டணி செப். 30-இல் கூடுகிறது?

தங்கம் விலை அதிரடி உயர்வு! இன்றைய நிலவரம்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்...

தங்கம் (கோப்புப்படம்)

Published On :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மீண்டும் உயர்ந்து ரூ. 57,000-ஐ எட்டவுள்ளது.

கடந்த வாரம் கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்து ஒரு சவரன் ரூ. 56,800-க்கு விற்பனையாகி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இந்த வாரத் தொடக்கம்முதல் தங்கத்தின் விலை சற்று குறைந்து செவ்வாய்க்கிழமை காலை ரூ. 56,400-க்கு விற்கப்பட்டது.

அதிரடி ஏற்றம்

இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து, ரூ. 56,800-க்கும், ஒரு கிராம் ரூ. 7,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 கேரட் தங்கமும் ரூ. 400 உயர்ந்து ரூ. 60,440-க்கும், ஒரு கிராம் ரூ. 7,555-க்கும் புதன்கிழமை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை

வெள்ளியின் விலை எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 101-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.